டாஸ்மாக் ஊழியர்கள் குடியேறும் போராட்டம்
கடலுார்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டம் நடந்தது.
கடலுார் சிப்காட் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் உதயசங்கர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சண்முகம் வரவேற்றார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement