பிரதோஷ வழிபாடு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சிவன் கோவில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடுவீரப்பட்டு, காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.

இதை முன்னிட்டு விநாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார உலாவாக வந்து அருள் பாலித்தார்.

Advertisement