போக்சோவில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே போக்சோ வழக்கில் கைதான நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 47; இவர் மீது திருக்கோவிலுார் அனைத்து மகளி ர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட் படுத்தப்பட்டார்.

இந்நிலையில் ராமு மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் பரிந்துரை செய்ததின் பேரில், கலெக்டர் பத்மஜா, ராமுவை குண்டர் சட்டத்தில் சிறையிலைடக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், ராமுவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Advertisement