தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரிப்பு
நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 39 வார்டுகள் உள்ளன. இதில், வசந்தபுரம், வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிபட்டி, வீசாணம் உள்ளிட்ட, 12 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முன், 1.21 லட்சமாக இருந்த மக்கள் தொகை, தற்போது, 3.50 லட்சமாக உள்ளது.
இந்நிலையில், நகர் பகுதியில் தற்போது தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள், ஆடு, மாடு, கோழிகளை கடித்து வருகின்றன. ஒரு சில நேரங்களில் பொதுமக்களையும் கடித்து வைக்கிறது.
குறிப்பாக, பரமத்தி சாலை, மோகனுார் சாலை, சேந்தமங்கலம் சாலை, கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு தெரு பகுதிகளில் தெருநாய் தொல்லை கட்டுக்கடங்காமல் போகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் கடந்துசெல்லும் அவலம் ஏற்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement