கோவிலில் தரிசனத்துக்கு ஏற்பாடு செயல் அலுவலரிடம் கோரிக்கை
ஈரோடு:ஈரோடு கோட்டை என்.எஸ்.எம்.பிளாசா முனியப்பன் கோவில் வீதி சண்முகசுந்தரம் மற்றும் மக்கள், ஈரோடு முனியப்பன்சுவாமி கோவில் செயல் அலுவலரிடம் அளித்த மனு: இக்கோவில் 100 ஆண்டுக்கு மேல் பழமையானது. மூல விக்ரகம் நுாற்றாண்டுக்கு முந்தையது.
கோவில் விக்ரகங்கள் இடமாற்றம் செய்தது ஆகம விதிமுறைக்கு விரோதமானது. 10 ஆண்டுக்கு முன்பிருந்த செயல் அலுவலர் தன்னிச்சையாக விக்ரகங்களை மாற்றியுள்ளார். மூல விக்ரகம் உள்ளிட்ட விக்ரகங்கள் நித்ய பூஜைகளின்றி எங்கு வைக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. தற்போது கோவிலையும் இடிக்க போவதாக தெரிய வந்துள்ளது. விக்ரகங்களை எடுத்ததால் ஒன்பது ஆண்டாக விழா நடக்கவில்லை.
கோவில் திருப்பணி வேறு. பூஜைகள் தினமும் செய்ய வேண்டிய நிலை வேறு. எனவே நலிவடைந்த இக்கோவிலில் சுவாமிக்கு நித்ய பூஜை செய்ய, மக்கள் வழிபாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.