காவிரியில் கொட்டப்படும் நகராட்சி குப்பையால் மாசு

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சி வாகனத்தில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதால், காவிரி ஆறு மாசடைகிறது.

பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் நேற்று மதியம், 12:00 மணிக்கு குப்பை கொண்டு வந்து ஆற்றுப்பகுதியில் கொட்டப்பட்டது. இவ்வாறு கொட்டப்படும் குப்பை நாளடைவில் ஆற்றில் கலந்து தண்ணீர மாசடைந்து விடுகிறது. ஏற்கனவே, சாயக்கழிவுநீரால் ஆற்று தண்ணீர் மிகவும் மாசடைந்து விட்டது. இந்நிலையில் நகராட்சி குப்பையும் கொட்டுவதால் ஆற்று தண்ணீர் மேலும் மாசடையும்.
மற்றவர்கள் வாகனத்தில் கொண்டு வந்து குப்பை கொட்டினால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என கூறி வரும் நிலையில், நகராட்சி நிர்வாகமே குப்பையை கொண்டு வந்து ஆற்றில் கொட்டுவதால், மக்கள் வேதனை அடைகின்றனர்.
எனவே, பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு, தடை விதிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement