சலிமா மீண்டும் கேப்டன்: இந்திய ஹாக்கி அணிக்கு

புதுடில்லி: ஆசிய விளையாட்டு, ஹாக்கி போட்டிக்கான இந்திய பெண்கள் அணி கேப்டனாக சலிமா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில், வரும் செப். 19 - அக். 4ல் ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பெண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

சலிமா டெட்டே கேப்டனாக தொடர்கிறார். சமீபத்தில் இவரது தலைமையில் இந்திய அணி, நேஷன்ஸ் கோப்பை வென்றிருந்தது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுஷிலா சானு, இஷிகா சவுத்ரி, ஜோதி, ஷில்பி தபாஸ், லால்தான்ட்லுவாங்கி மீண்டும் தேர்வாகினர். கோல்கீப்பராக சவிதா, பிச்சு தேவி இடம் பெற்றுள்ளனர். நேஷன்ஸ் கோப்பையில் விளையாடிய சோனம், அன்னுவுக்கு பதிலாக பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய அணி: சலிமா (கேப்டன்), சவிதா, பிச்சு தேவி (கோல்கீப்பர்), இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, ஜோதி, ஷில்பி தபாஸ், லால்தான்ட்லுவாங்கி, நிக்கி பிரதான், சாக் ஷி ராணா, சுனேலிதா, நேஹா, தீபிகா சோரெங், லால்ரெம்சியாமி, ருதுஜா பைசால், நவ்னீத் கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்.

Advertisement