வாளையார் சோதனைச்சாவடியில் 700 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல்

க.க.சாவடி: க.க.சாவடி அடுத்து வாளையார் சோதனை சாவடியில் நேற்று போலீஸ் எஸ். எஸ்.ஐ., சுரேஷ் உள்பட ஒன்பது பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவை நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட ஒருவரை விசாரித்தனர்.

அவர் கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த முஹமது, 65, என்பதும், நகை பட்டறை வைத்திருப்பதும் தெரிந்தது. அவரிடமிருந்த கவரில், பழைய நகைகளை உருக்கி செய்யப்பட்ட, 700 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள், இரு வளையல்கள் உரிய ஆவணங்களின்றி இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து முஹமதுவுடன், வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் சத்யராஜிடம் ஒப்படைத்தனர்.

Advertisement