சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: கணக்கில் வராத ரூ.35,730 பறிமுதல்

3



நமது நிருபர்




தேனி மாவட்டம் போடிமெட்டு, முந்தல், குமுளி போலீஸ் சோதனை சாவடிகளில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.35,730ஐ பறிமுதல் செய்தனர்.

தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில்போடிமெட்டு, முந்தல், கம்பமெட்டு, குமுளியில் போலீஸ் சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக உரிய ஆவணம் இன்றி கனிமம், கால்நடைகள்கொண்டுசெல்லும் வாகனங்களை போலீசார் சோதனை செய்யாமல் பணம் வசூல் செய்து அனுப்புவதாக தொடர்ந்துபுகார் எழுந்தது.

நேற்று காலை 6:30 மணிக்கு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையில் தேனி இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி போடிமெட்டு சோதனை சாவடியிலும், முந்தல் சோதனை சாவடியில் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் ரூபா சீதாராணி முன்னிலையில் எஸ்.ஐ.,க்கள் சோதனை நடத்தினர்.

இரு பகுதியில் இருந்து வந்து செல்லும் வாகனங்கள் குறித்து பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். அங்குள்ள இருக்கைகள், டேபிள், அறையில் இருந்த பைகளில் சோதனை செய்தனர்.போடிமெட்டு சோதனை சாவடியில் ரூ. 5790, முந்தல் சோதனை சாவடியில் ரூ.3500 என கணக்கில் வராத ரூ.9290ஐ பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கூடலுார் குமுளி அவுட் போலீஸ் ஸ்டேஷனில் கேரளாவில் இருந்துதமிழகத்திற்கு வரும்வாகனங்களும் சோதனை செய்யப்படும். நேற்று காலை 6:00மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் ஸ்டேஷனில் கதவுகளை மூடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. கடந்து செல்லும் வாகனங்களின்விபரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஆய்வுசெய்யப்பட்டது.

காலை 11:45மணி வரை நடந்த சோதனையில்கணக்கில்வராத ரூ.26,440 ஐ பறிமுதல்செய்தனர். பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., அய்யப்பன், ஏட்டுகள் அருள்ராஜ், பாஸ்கரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement