எலிகளை ஒழிக்க பா.ஜ.கோரிக்கை

கோவை: அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை பாடாய் படுத்தும் எலிகளை நிரந்தரமாக ஒழிக்க பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

பா.ஜ.,மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் அறிக்கை:

அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதியில் சுகாதாரக்குறைபாடுகளும் ஊர்வன, எலி உள்ளிட்ட ஜந்துக்கள் சுற்றிவருவதும் அதிர்ச்சியை தருகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் துவங்கி படிப் படியாக ஒவ்வொரு வார்டுக்குள்ளேயும் எலிகள் படையெடுக்கும், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றால் நோயாளிகளின் நிலை படுமோசமாகிவிடும். இவ்விவகாரத்துக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement