மதுரை மாணவரின் கண்டுபிடிப்பு 'நாசா' ஆராய்ச்சி திட்டத்திற்கு தேர்வு
மதுரை: மதுரையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அகிலேஷின், 'செவ்வாய் கிரக மண்ணில் மின்சாரம் தயாரிப்பது' தொடர்பான கண்டுபிடிப்பு, நாசாவின் 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ் 2026' ஆராய்ச்சி திட்டப்போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாசா இப்போட்டிகளை சர்வதேச அளவில் நடத்துகிறது. இந்தாண்டு இப்போட்டியில், 80 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு தலைப்புகளில் புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர்.
இறுதியாக, 100 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், மதுரை, சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலேஷின், 'செவ்வாய் கிரகத்தில் உயிரணுக்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா' என்பது தேர்வு செய்யப் பட்டுள்ளது.
அகிலேஷ் கூறியதாவது: விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் செவ்வாய் கிரகத்தில் இறங்குதல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அங்கு மின்சாரம் மிக தேவை. இது சோலார் அல்லது பேட்டரி மூலம் அங்கு பெறப்படுகிறது. இதற்கு மாற்றாக உயிரணுக்களின் செயல்பாட்டில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் தொடர்பாக கருவியை வடிவமைத்துள்ளேன்.
இதற்காக செவ்வாய் கிரக மண்ணில் உள்ள வேதியியல் தன்மையை ஆராய்ந்து, அதே வேதித்தன்மையை பூமியில் உள்ள மண்ணில் சேர்த்து, 'செயற்கை செவ்வாய் கிரக மண்' உருவாக்கினேன். அதில் பாக்டீரியாக்களை உருவாக்கி மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்தேன்.
இது, ஆகஸ்ட்டில் அமெரிக்கா நாசாவின் 'வல்லாப்ஸ் பிளைட் பெசிலிட்டி' என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு, 38 கி.மீ., உயரத்தில் உள்ள பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் நாசா . இஸ்ரோ ல கூப்பிடலையா ? நம் அறிவு நமக்கு தான் பயன்பெற வேண்டும். ஆம் நாசா வேலைக்கு நாசா தான் சிறந்தது நாசமா போச்சு
அய்யா அப்துல்கலாம் இன்றும்.
நம்மோடுதான்இருக்கிறார்கள்.
இளம்விஞ்ஞானிக்குவாழ்த்துக்கள்
Congratulations
வாழ்த்துக்கள்
மிகவும் சந்தோஷம்
விளையும் பயிர் முளையிலே! என்று நிரூபித்த இந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள். சிறந்த விஞ்ஞானியாக வளர்க.
வெளிநாட்டில் வேலை கிடைத்து விட்டது என்று கதறுவார்கள் .
Congratulations
Request to our central government, Please recognise our student's.
அறிவியலை ஆதரிப்போம் -பரப்புவோம் -கடைபிடிப்போம்..
மதி மயக்கும் மதவாதத்தை வேரறுப்போம.மேலும்
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை