போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பல்லடம்: ஆறாகுளத்தில் அமைந்துள்ள லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், போதை இல்லா சமுதாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமை வகித்தார். இணை நிர்வாக அறங்காவலர் நடராஜன் முன் னிலை வகித்தார். தாளாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். டி.எஸ்.பி பார்த்திபன், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞர் சித்ராதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ரமணி, மேலாளர் விக்னேஷ் பரமாத்மா ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement