சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை

பல்லடம்: திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழு ஆலோசனைக் கூட்டம், பல்லடத்தில், சங்க தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

கூட்டத்தில், வேலுசாமி பேசியதாவது:

விசைத்தறிக்கூடங்களுக்கு சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று அவசியமாகிறது. எதிர்வரும் காலகட்டத்தில் இது கட்டாயமாக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கடனுக்கும், கடன் வட்டிக்கும் மானியம் கிடைக்கும். மத்திய அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் விசைத்தறியாளர்களுக்கு இந்த சான்றை கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்து வழங்க தயாராக உள்ளனர்.

எனவே, அனைத்து விசைத்தறியாளர்களும் இந்த சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்றை பெறவேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது, என்றார்.

Advertisement