பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
மங்கலம்: மங்கலம், சோமனுார் ரோடு, செட்டிதோட்டத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான சாய ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாய்லரில் திடீரென தீ பிடித்து, வெடித்தது.
இதன் காரணமாக, அந்த இடம் முழுதும் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுப்படாததால், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பல்லடம், அவிநாசி மற்றும் வடக்கு ஆகிய இடத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சென்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் பாய்லர், துணி மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
Advertisement
Advertisement