சோமாலியாவில் சிக்கி தவித்த மீனவர்கள் ஊர் திரும்பினர்

ராமநாதபுரம்: சோமாலியாவுக்கு மீன்பிடிக்கச் சென்று அங்கு உணவின்றி தவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மீட்கப்பட்டு நேற்று தாயகம் திரும்பினர்

ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை சுந்தரம் 50, மோர்ப்பண்ணை காளீஸ்வரன், ராமேஸ்வரம் ரமேஸ் 44, கண்ணன் 40, ஆகியோர் மீன் பிடித் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் ஏஜன்ட் ஒருவர் சோமாலியா நாட்டில் மீன்பிடித் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியதை நம்பிரூ.50 ஆயிரம் வரை செலுத்தியுள்ளனர்.

சோமாலியாவுக்கு அழைத்துச் சென்ற ஏஜன்ட் திரும்ப வந்த நிலையில் 4 பேருக்கும் வேலை ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக கிடைக்கும் வேலையை பார்த்து வந்துள்ளனர்.சோமாலியாவில் தாங்கள் சிக்கி உணவு கூட கிடைக்காமல் தவிப்பது குறித்து கடந்த மாதம் வீடியோ வெளியிட்டனர்.

இதையடுத்து குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனர்.இந்நிலையில் 4 மீனவர்களும் மீட்கப்பட்டு நேற்று ராமநாதபுரம் அழைத்து வரப்பட்டனர்.

Advertisement