வெண்ணைமலை சேரன் பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழா

கரூர்:கரூர், வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு, பாண்டிசேரி நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம், நுகர்கோர் உரிமை குறித்து பேசினார். டாக்டர் செல்வராஜ், நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, பள்ளி முதல்வர் பழனியப்பன், பள்ளி துணை முதல்வர் பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement