ரூ.25,000 கோடி கோவில் சொத்து தாரைவார்ப்பு; அறநிலையத்துறை உத்தரவால் வெடித்தது சர்ச்சை!
சென்னை: கரூரில், 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களுக்கான பத்திரப்பதிவு தடையை நீக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் இணை கமிஷனருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் வினய் பிறப்பித்த உத்தரவு:
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர், கல்யாண பசுபதீஸ்வரர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர், வெஞ்சமாங்கூடலுார் விக்ருதீஸ்வரர் ஆகிய கோவில்களின், 3,085 ஏக்கர் நிலங்கள், கோவில் பெயரில் இருந்தன. பின், தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலங்களுக்கு, அறநிலையத்துறை அதிகாரிகளால் தவறுதலாக பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் தடையை நீக்கலாம் என, கரூர் கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.
இதனால், 3,390 பட்டாதாரர்கள் பயனடைவர். எனவே, உடனடியாக தடை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கோவில் சொத்துக்களை அபகரிக்கும் செயல் என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
கரூரில், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,085 ஏக்கர் கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கும் நோக்கில், அவற்றின் மீதான பத்திரப் பதிவுத் தடையை,
அறநிலையத் துறை நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, கோவில் சொத்துக்களை த.வெ.க., அரசு சூறையாடத் தொடங்கியுள்ளது கண்டனத்திற்குரியது.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் நிறுவனர் டி.ஆர்.ரமேஷ்:
தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், கோவில்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பெரும் துரோகம் இது. இந்த கொடுஞ்செயல் தி.மு.க., ஆட்சியில் கூட நடக்கவில்லை.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன்:
கரூருக்கு நேற்று முதல்வர் விஜய் வந்த நிலையில், கோவில் சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய வசதியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பவர்களுக்கு சாதகமாக அரசே செயல்படுவது ஏற்க முடியாதது. இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார்:
கோவில் நிலங்களை தனி நபர்களுக்கு தாரைவார்க்கும் வகையில், பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளே, அவை கைமாறும் நிலையை உருவாக்குவது, இறைவனுக்குச் செய்யும் துரோகம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Worst administration.Instead of doing reels do inspection where it is needed in a effective way .Worse than DMK.
முன்பு கோவில் நிலம் ஏன் தனி நபர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டது? அவ்வாறு கொடுக்கப்பட்ட பட்டா நிலங்களை விற்பனை செய்ய முடியாது என்பது சட்டம். இதை பதிவுத்துறை பதிவு செய்ய இருக்கும் தடையை நீக்கலாம் என கலெக்டர் ஏன் பரிந்துரை செய்யனும்?
இதை உடனடியாக இந்து அமைப்புகள், இந்து கோவில் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை வழக்குகள் தொடர வேண்டும்.
worse than dmk rule.in what wsy tvk is different.dmk rule simply continues under a different blanket.no this is not a duplicate comment
இந்து மக்களுக்கும், தமிழகத்திற்கும் நன்மை நூறு சதவீதம் உண்மைத்தன்மையுடன் நல்லது செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை ரமேஷ் அவர்கள் அறநிலையத்துறைக்கு பெயரளவில்தான் அமைச்சர். முடிவெடுப்பது வேறு ஒரு கூட்டம் என்று எண்ணுகிறேன்.
இதே போல தமிழகலத்தில் உள்ள அனைத்து கோயில் நிலம் அக்ரமிப்பாளர்களுக்கும் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
விஜய் சினிமா காரன். அதிலும் கிறித்தவ மதத்தை பின்பற்றுவன். தவெக திமுகவால் உருவாக்கப்பட்ட கட்சி. மக்கள் நீதி மையம் போல வாக்குகள் மட்டுமே பிரிக்கும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பாராத வகையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆகவே இதனை சரி செய்யும் வகையில் திமுக காய் நகர்த்தி அதிமுகவினருக்கு ஆசை வார்த்தை கூறி தவெகவில் இணைக்கின்றது. ஏற்கனவே திருமாவளவன் கம்யூனிஸ்ட்களை உள்ளே அனுப்பி தவெகவினரிடையே மனதில் ஆசையை தூண்டி கொண்டு உள்ளது. இதில் அதிமுக வலுவிலக்க செய்தால் திமுக அடுத்த தேர்தலில் சுலபமாக வெற்றி பெற இயலும் என்பது திமுக கணக்கு. பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல சினிமா காரன் புத்தி சினிமா காரனுக்கு நன்கு தெரியும். சென்ற தேர்தல் போது கூட தவெகவினர் இங்கிலாந்து இருந்து விஜயிக்கு 10000 கோடி கிறிஸ்துவ நன்கொடை வரும் என்று கூறிக் கொண்டு இருந்தனர். கமலை போல விஜயும் ஒரு திமுக காரன் என்பது விரைவில் தெரியவரும். அப்போது இப்போது அதிமுகவிலிருந்து தவெகவிற்கு சென்றவர்கள் திமுகவோடு சேர்ந்து விடுவார்கள். அப்போது தெரியும் எந்த அதிமுக காரர்கள் திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர் என்று. விஜயும் இந்து மத எதிர்ப்பாளர். நாடகமாடி இந்து மதத்தை அழிக்க வந்த கூத்தாடி.
நீங்கள் சொல்வது 100% சரியானது.மேலும்
-
அமெரிக்கா கடும் தாக்குதல்; ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்
-
இங்கே அம்மாக்களின் கனவு நிறைவேறுகிறது! Between Life
-
தமிழகத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது!
-
அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்
-
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
-
'வீ த லீடர்ஸ்' விழிப்புணர்வு மாநாடு ; பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது