இங்கே அம்மாக்களின் கனவு நிறைவேறுகிறது! Between Life

'ஒ ரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி விட்டாலும், அவளுடைய கனவுகளுக்கு புல்ஸ்டாப் வரக்கூடாது!'

- இந்த உணர்வை நிஜமாக்கும் முயற்சியாக கோவையில் உருவாகியுள்ளது பிட்வீன் லைப் (Between Life) என்ற, அம்மாக்களுக்கான சமூக அமைப்பு.

சோனாலி காமாட்சி என்பவர், நான்கு மாதங்களுக்கு முன் துவங்கியதுதான் இந்த அமைப்பு.

திருமணம், குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கையில் மூழ்கி, தங்களுக்கான நேரத்தையும் நட்பு வட்டத்தையும் இழந்த பெண்களை, மீண்டும் இணைப்பதே இதன் நோக்கம்.

மகளிர் தொழில்முனைவோர் சந்திப்பு, குழந்தைகள் சந்திப்பு, மம்மிகள் சந்திப்பு உள்ளிட்ட பெயர்களில் பல நிகழ்ச்சிகளை உருவாக்கி, அங்கு சந்தித்து ஏரியாவையே கலகலப்பாக்கி வருகின்றனர். இங்கு புதிது புதிதாக நபர்கள் அறிமுகமாக, விரிவடைகிறது நட்பு வட்டாரம்.

இதுதான் இந்த அமைப்பின் நோக்க மும் கூட.

இந்த சந்திப்புகள் வாயிலாக, பெண்கள் தங்கள் திறமைகள், தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு தகவல்கள், வணிக அனுபவங்களை பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கின்றனர்.

குறிப்பாக தொழில்முனைவோராக உள்ள பெண்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், தொடர்புகள் (Networking), ஒத்துழைப்புகள் உருவாகி, அவர்களின் வணிக வளர்ச்சிக்கும் இந்தக் குழு ஒரு தளமாக மாறியுள்ளது.

நிறுவனர் சோனாலி பகிர்ந்த ஒரு சம்பவம், இந்த சமூகம் எங்கு போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

“ஒரே தெருவில் வசித்த இரண்டு அம்மாக்கள், எங்கள் நிகழ்ச்சியில் சந்தித்த பிறகுதான் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டார்கள். இன்று அவர்கள் நல்ல நண்பர்கள். இதுபோன்ற பல உறவுகள் இந்த குழுவால் உரு வாகியுள்ளன,” என்கிறார் அவர்.

“அம்மா என்பது ஒரு உறவு மட்டுமல்ல… அவளுக்கும் தனி கனவுகள், நண்பர்கள், தொழில், வாழ்க்கை இருக்கிறது” என்பதை உணர வைக்கும் புதிய தலைமுறை சமூகமாக Between Life கோவையில் கவனம் பெற்று வருகிறது.

@quote@ பெண்கள் எப்போதும் மற்றவர்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டாம். அவர்களுக்கென ஒரு நட்பு வட்டம், ஆதரவான சமூகமும், தன்னம்பிக்கையும் உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை தொடங்கினோம். - சோனாலி, நிறுவனர், பிட்வீன் லைப்quote

Advertisement