உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு 

திருப்பூர்: உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வாகன பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

'தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும், திட்டமிடாத கர்ப்பங்களை தடுப்பதற்கும், கர்ப்ப இடைவெளியே பேணுவோம்' என்ற மையக்கருத்துடன், விழிப்புணர்வு ஊர்வலம், வாகன விழிப்புணர்வு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

வி.ஏ.டி., மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்திய இசையுடன், ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் மாநகராட்சியை சென்றடைந்தது. முன்னதாக, கலெக்டர் தலைமையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் கண்ணன் மகராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மனோன்மணி, நகர்நல அலுவலர் மோகன் மக்கள் கல்வி தகவல் அலுவலர் ராணி, காந்திநகர் ரோட்டரி நிர்வாகிகள், செவிலியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement