பாசன மோட்டார் ஒயர்கள் திருட்டு: பெண்ணாடம் விவசாயிகள் அச்சம்

பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே அடுத்தடுத்து பாசன மோட்டார் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணாடம் அடுத்த அரியராவியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 60. விவசாயி. இவருக்கு அதே பகுதியில் பாசன மோட்டாருடன், 4 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளன. வழக்கம் போல் நேற்று காலை நிலத்திற்கு சென்று பார்த்த போது, மின் கம்பத்தில் இருந்து ஆழ்துளை கிணறு நீர்மூழ்கி மோட்டாருக்கு செல்லும் 30 மீட்டர் காப்பர் ஒயர்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதேபோன்று, அருகிலுள்ள ராமசாமி, 60, வேல்முருகன், 45, ஆகியோரது பாசன மோட்டார் ஒயர்கள் மற்றும் பியூஸ் கேரியர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து, பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர். அடுத்தடுத்து பாசன மோட்டார் ஒயர்களை மர்ம நபர்கள் துண்டித்து திருடிச் சென்ற சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement