பரையந்தாங்கல் – சென்னை பஸ் சேவை துவக்கம்  

அவலுார்பேட்டை: பரையந்தாங்கல் – சென்னை வழித்தடத்திற்கு பஸ் சேவை துவங்கியதையடுத்து கிராம மக்கள் 2 பஸ்களையும் வரவேற்று ஆரத்தி எடுத்து கொண்டாடினர்.

மேல்மலையனுார் அடுத்த பரையந்தாங்கல் கிராமத்திலிருந்து வெளியூருக்கு செல்ல பஸ் வசதி இல்லாத நிலையில் கிராம மக்கள் பல வகையிலும் சிரமத்திற்குள்ளாகினர்.

தன்னிறைவு பெற்று ஜனாதிபதியின் பாராட்டை பெற்ற இந்த ஊராட்சியைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பஸ் சேவை தற்போது நிறைவேறியது.

புதிய அரசு பஸ் தடம் எண்.121 எப்,  செஞ்சியிலிருந்து காலை 7:20, மணிக்கு புறப்பட்டு 8:00 மணிக்கு பரையந்தாங்கல் வழியாக பழம்பூண்டியிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் செல்கிறது.

மீண்டும் மதியம் 3:45, மணிக்கு தடம் எண்.17 பி, செஞ்சியிலிருந்து மேல்மலையனுார், பரையந்தாங்கல் வழியாக 4:30 மணிக்கு பழம்பூண்டி வந்தடைகிறது.

இந்த இரண்டு பஸ்களும் பழம்பூண்டிக்கு நேற்று முன்தினம் வந்தது. ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில்  கிராம மக்கள் ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Advertisement