வயிற்று வலியால் பெண் தற்கொலை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வயிற்று வலி தாங்க முடியாமல் பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பாலகிருஷ்ணன் மகள் பச்சையம்மாள், 44. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த பச்சையம்மாள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று வலி அதிகமாக இருந்ததால் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement