ஹேக்கத்தான் போட்டியில் திருவாடானை மாணவி முதலிடம்

திருவாடானை: காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த நான் முதல்வன் திட்ட ஹே க்கத்தான் போட்டியில் திருவாடானை அரசு கலைக்கல்லுாரி மாணவி முதலிடம் பிடித்தார். தமிழக அரசின் உயர்கல்வித்துறையில் செயல்படும் நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் காரைக்குடி அழகப்பா பல்கலை அளவிலான ேஹக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது. இறுதிச் சுற்று போட்டியில் ஏராளமான மாணவர்கள் தங்களின் புத்தாக்க தொழில் நுட்ப ப்ராஜக்ட்களுடன் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு படித்து வருபவர் ஆர்.அபிராமி. இவர் தனது முன்மாதிரியான செயல்திறனை வெளிப்படுத்தினார். இவரது தொழில் நுட்ப வடிவமைப்புக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு திருவாடானை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பழனியப்பன், கணினி அறவியல் துறை தலைவர் ஆனந்தஜோதி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

--

Advertisement