வங்கதேச ஆசாமிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
திருப்பூர்: ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கியிருந்த, வங்கதேசத்தினர் நான்கு பேருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
திருப்பூர், ராதா நகர் பகுதியில், 2025 செப். மாதம் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் ஹூசைன் அகஹண்டா, 32, முகமது அப்துல் மன்னன்,36, பரூக் அக்தர், 35, பாரூக் ஹூசைன், 54 ஆகிய நான்கு பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததை கண்டறிந்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, திருப்பூர், 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.
அதில், முகமது இஸ்மாயில் ஹூசைன் அகஹண்டா, முகமது அப்துல் மன்னன், பரூக் அக்தர் ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாரூக் ஹூசைனுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில், வக்கீல் பூமதி ஆஜரானார்.
மேலும்
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை