ஹால்டர் நெக் ஆடையும் பாரம்பரிய ஆக்சைடு நகையும்!
பேஷன் உலகம் எப்போதும் புதிய பரிமாணங்களை தேடிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், நவீன ஹால்டர் நெக் உடைகளுடன் பழமை மாறாத ஆக்சைடு நகைகளை இணைப்பது டிரெண்டிங்.
இது மாடர்ன் மற்றும் எத்னிக் இரண்டையும் கலந்த ஒரு தனித்துவமான அழகை தருகிறது என்கிறார், ஆடை வடிவமைப்பாளர் பிரியங்கா.
தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியை அழகாக எடுத்துக்காட்டும் ஹால்டர் நெக் உடைகள், எப்போதுமே ஒரு கம்பீரமான தோற்றத்தை தரும். பார்ட்டிகள் மற்றும் நண்பர்களுடனான சிறிய கொண்டாட்டங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.
வெள்ளி நிறத்தில், கருமை கலந்த ஆன்டிக் தோற்றம் கொண்ட ஆக்சைடு நகைகள், எந்த நிற உடையுடனும் எளிதாக பொருந்தி, அதன் எடுப்பான தன்மையை மேலும் மெருகூட்டுகின்றன.
ஹால்டர் நெக் உடைகளுக்கு நெக்லஸ் அணிவதைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, பெரிய வேலைப்பாடுகள் நிறைந்த ஸ்டேட்மென்ட் ஜிமிக்கிகள் அல்லது சான்பாலி (Chandbali) காதணிகளை அணியுங்கள். இது முகத்திற்கு அழகைத் தரும்.
இத்தகைய உடைகள் தோள்பட்டையை வெளிக்காட்டுவதால், கைகளில் சில ஆக்சைடு வளையல்கள் அல்லது ஒரு பெரிய ஆக்சைடு பிரேஸ்லெட் அணிவது கைகளை அழகாக மாற்றும்.
மேற்கத்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த ஹால்டர் நெக் உடைகளுடன், பாரம்பரிய ஆக்சைடு நகைகளை இணைக்கும் ப்யூஷன் லுக், உங்களை கூட்டத்தில் தனித்து தெரிய வைக்கும்.
மேலும்
-
அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்
-
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
-
'வீ த லீடர்ஸ்' விழிப்புணர்வு மாநாடு ; பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது
-
அமைச்சர் பூபேந்திர யாதவ் ராஜினாமா?
-
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
-
வெண்ணைமலை சேரன் பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழா