மண் அரிப்பால் சாலையோர பள்ளம் ஆற்பாக்கத்தில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்: ஆற்பாக்கம் கிராமத்தில் மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்துடன் சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை ஆற்பாக்கம் வழியாக மாகரல், வெங்கச்சேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆற்பாக்கத்தில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்
-
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
-
'வீ த லீடர்ஸ்' விழிப்புணர்வு மாநாடு ; பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது
-
அமைச்சர் பூபேந்திர யாதவ் ராஜினாமா?
-
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
-
வெண்ணைமலை சேரன் பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழா
Advertisement
Advertisement