மணல், கூழாங்கற்கள் கடத்திய இரு டிப்பர் லாரிகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து மணல் மற்றும் கூழாங்கற்களை கடத்தி வந்த இரு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், சென்னை கிண்டியைச் சேர்ந்த சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து, 25 டன் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து 35 டன் கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இரு டிப்பர் லாரிகளையும், அதன் ஓட்டுநர்களான ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா, 22, பிரம்மய்யா, 50, ஆகியோரையும், ஆரம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement