பாலபவன் குளோபல் பள்ளி மாணவர் மன்றம் பதவியேற்பு

திருப்பூர், ஜூலை 12–



திருப்பூர், மண்ணரையிலுள்ள பாலபவன் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலீட்டு பதவியேற்பு விழா நடந்தது. ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் மாலதி முத்துரத்தினம், செயலாளர் சக்தி மிருதுளா பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலமுருகன் பங்கேற்று, மாணவர் மன்ற நிர்வாகிகளுக்கான பொறுப்புகள், அதிகாரங்களை துவக்கி வைத்தார்.



அதன்பின், சமூகசேவை மற்றும் தலைமைத்துவ விழா நடந்தது. தெற்கு ரோட்டரி சங்க தலைவர் காஸ்மோஸ் மோகன்ராஜ், பள்ளியின் செயலாளர், தாளாளர், ரோட்டரி சமூக பொருளாளர் ஆடிட்டர் செல்வம், மாவட்ட உதவி கவர்னர் பிரியாமோகனசுந்தரம், முன்னாள் தலைவர் சக்திவேல், முன்னாள் உதவி கவர்னர் இளங்கோவன் உட்பட சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை வளரும் வகையில் விழிப்புணர்வுடன் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினர்.

Advertisement