பூ குண்டம் இடம் பாதுகாக்க மனு

குன்னூர்:

குன்னூர் மார்க்கெட் கடைகள் இடித்து கட்ட 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தி.மு.க., ஆட்சியில் டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது.

இங்குள்ள பாரம்பரியமிக்க பூகுண்ட வழிபாட்டு இடம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து வியாபாரிகள் நலச்சங்கம் கடந்த மே மாதமே வலியுறுத்தி அதிகாரிகளுக்கு நேரடியாக மனு வழங்கியிருந்தனர்.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், நூற்றாண்டு பழமையான ஆன்மிக பாரம்பரிய தொடர்புடைய பூகுண்டத்தை பாதுகாப்பு பணி செய்யாமல், மெத்தன போக்குடன் கட்டடம் இடிப்பு பணியை துவக்கியுள்ளனர். கடமையை மறந்து செயல்படும் இதுபோன்ற நகராட்சியின் தொடர் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது. பூகுண்ட பாதுகாப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதுடன், கடமை தவறிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.’ என்றனர்.

Advertisement