அதிமுகவின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது; அமைச்சர் செங்கோட்டையன்

6

நமது நிருபர்



அதிமுகவின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்த அனைவரும் இளைஞர்கள், பெண்கள், கல்லுாரி மாணவர்கள். அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாட்டுக்கு செல்லும் இளைஞர்கள் வேறு.

கரூர் துயர சம்பத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வி கேட்போர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கியபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை.

'தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் கூட்டணி சேர்ந்தால் என்ன தப்பு' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கேட்கிறார். இந்த இரண்டு கட்சிகளும் இரு துருவங்கள் என தினகரனுக்கு தெரியாதா. அ.தி.மு.க.,வின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்ததாதது குறித்து, தமிழகத்தின் நிலைப்பாட்டை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெளிவாக கூறி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement