அரசு மருத்துவமனையில் எலி பிரச்னைக்கு தீர்வு
கோவை: அரசு மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன் குழிகள் தோண்டி எலிகள் அதிகமாக வசிப்பதால், மருத்துவமனை வருவோருக்கு அச்சம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, நமது நாளிதழில் 10ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து வார்டுகளில் எலி தொந்தரவு இருக்கும் பகுதிகளில், குப்பையை உடனே அகற்ற வேண்டும், எலி வரும் பாதைகளை அடைக்க வேண்டும் என அமைச்சர் சம்பத்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சிமென்ட் தளம் போட்டு எலி பொந்துகள் மூடப்பட்டுள்ளன.
குப்பை தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய, துாய்மை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறகுப்பந்து போட்டி
-
நலம் ஏ.ஐ., செயலியில் வாட்ஸ்ஆப் எண்ணில்வீட்டில் இருந்தவாறு வெளிநோயாளி சீட்டு பதிவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
-
போலீஸ் செய்திகள்... விபத்தில் முதியவர் பலி
-
ரூ.14 கோடி வங்கி மோசடியில் வழக்குப்பதிய போலீசார் தாமதம்
-
குறுவட்ட கபடிபோட்டி மாணவிர்கள் ஆர்வம்
-
முதல்வர் விஜய் தலைமையில் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்
Advertisement
Advertisement