ஆனி பிரதோஷ பூஜை

தேவகோட்டை, ஜூலை 13– -

தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ நாயனார் பூஜைக்கு பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். ஐநூற்றீஸ்வரர், திருகயிலேஸ்வரர், கவுரி கைலாசநாதர், நித்திய கல்யாணி கைலாசநாதர், வெளிமுத்தி பழம்பதி நாதர், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர், நயினார் வயல் அகத்தீஸ்வரர் ஆகிய கோயில்களில் ஆனி பிரதோஷ பூஜைகள் நடந்தது.

//

Advertisement