‘பெம்’ பள்ளியில் முதலீட்டு விழா

திருப்பூர்: பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ், பூமலுார் கிளையில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., சையது இக்பால், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு பேட்ஜ் அணிவித்து பேசினார். மாணவர்கள், நியமன கடிதங்களையும் பெற்றுக் கொண்டனர். பள்ளி இணைச் செயலர் சரணயா, மூத்த முதல்வர் கவுசல்யா ராஜன், பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய மாணவர் தலைவர்கள், தங்களது கடமைகளை நேர்மையுடனும், விதிகளுக்கு உட்பட்டும் பொறுப்புடனும் செயல்படுவோம் என, உறுதியேற்றனர். 

Advertisement