ராமேஸ்வரத்தில் கேரள போதை இளைஞர் ரகளை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கேரள போதை இளைஞர் டிராபிக் போலீசாருடன் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்தவர் பேட்ரிக் 30. இவர் சில நண்பர்களுடன் காரில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கேரளா திரும்பி உள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் ஒரு வழி பாதையில் செல்ல முயன்ற போது டிராபிக் போலீசார் தடுத்தனர். ஆனால் தடையை மீறி சென்ற பேட்ரிக்கை மற்றொரு சோதனை மையத்தில் இருந்த டிராபிக் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கேரள இளைஞர் போதையில் இருந்ததால் போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்ல முயன்ற போது, ஆட்டோவில் ஏறாமல் அடம் பிடித்து ரகளை செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக போதை இளைஞரை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின் நடந்த தவறுக்கு கேரள இளைஞர் மன்னிப்பு கேட்டதால் போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.
–––