பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

ராஜபாளையம், ஜூலை 12-

ராஜபாளையம் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மலையடிப்பட்டி ரயில்வே கேட் 2 நாட்கள் (ஜூலை 13,14) மூடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையம் நகர் பகுதி நடுவே சஞ்சீவி மலை அருகில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலம் வழியே கடந்து செல்வதை தவிர்க்க இப்பகுதி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்துகின்றனர்.

இந்த கேட் பராமரிப்பு பணிக்காக ( ஜூலை 12, 13ல்) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படும். இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியினர்.

Advertisement