போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி., ஆய்வு

நத்தம், ஜூலை 12-

நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள், வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பார்வையிட்டார். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., மலைச்சாமி, அபினேஷ், போலீசார் உடனிருந்தனர். இதேபோல் சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு செய்தார்.

Advertisement