5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிங்கபெருமாள் கோவில், ஜூலை 13-–

திருக்கச்சூரில் வாகன சோதனையில் போலீசார் 5 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். 



திருக்கச்சூர் பகுதியில் சிங்கபெருமாள் கோவில் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ‘டாடா பன்ச்’ காரை மறித்து சோதனையிட்டபோது, காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அதன்பின் காரில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணை யில்,

பிடிபட்ட நபர் சென்னை, ராயபுரத்தை சேர்ந்த செந்தில், 52; என்பதும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 70,000 ரூபாயுடன், காரை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் செந்திலை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement