வெலிங்டன் கன்டோன்மென்ட் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு
குன்னூர்:
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், வெலிங்டன் பெயரை நீக்கி, நீலகிரி கன்டோன்மென்ட் என மாற்ற மக்களின் ஆலோசனைகளை கேட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வாரிய முன்னாள் உறுப்பினர் துரைராஜ் தலைமையில் மக்கள் கோரிக்கை அடங்கிய மனுவை வாரிய அதிகாரிகளிடம் வழங்கினர்.
வாரிய முன்னாள் உறுப்பினர் துரைராஜ் கூறுகையில், நூற்றாண்டுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ள வெலிங்டன் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளத்தோடு உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய பெயர் மாற்றம் செய்வது, ரயில்வே, தபால் மற்றும் ராணுவ ஆவணங்கள் மற்றும் அரசு பதிவேடுகளில் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் நிர்வாக சுமை, செலவு அதிகரிக்கும். உள்ளூர் மக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆர்வலர்கள் உட்பட அனைவரின் ஆலோசனைகள் முழுமையாக பெற வேண்டும் அல்லது இதனை கைவிட வேண்டும், என்றார்.
மேலும்
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை