ரயிலில் குட்கா கடத்திய மூன்று பெண்கள் கைது
கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம், 44 கிலோ குட்கா பாக்கெட்டுகளை கடத்திய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கையில் மூட்டைகளுடன் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்ற மூன்று பெண்களை விசாரித்தனர். பின், அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டனர். அதில், 44 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முருகவல்லி, 55, ஜோதி, 50, அங்காளம்மா, 49, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement