மூதாட்டி மர்ம சாவு போலீஸ் விசாரணை

ராமநத்தம்: மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநத்தம் அடுத்த ஆலம்பாடி கிராமத்திலுள்ள விவசாய வயலில், 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன், ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், ராமநத்தம் அடுத்த ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிர மணியன் மனைவி மணியம்மாள், 55; என தெரிந்தது.

அவரது உடலில் தீக்காயங்கள் உள்ளதால் கொலையா? தற்கொலையா? என போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement