வாலிபரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 32; இவரது மனைவி பிரமாவும், அதேபகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி விமலாதேவி என்பவரும் ஒரே மகளிர் சுய உதவி குழுவில் உள்ளனர்.இதில், இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த விமலாதேவி, மகள் ஆர்த்தி, மகன் ஆதித்யன், ஆதரவாளர் சித்தலுார் பிரகாஷ், 26; ஆகிய நால்வரும் அரிகிருஷ்ணனை அசிங்கமாக திட்டி தாக்கினர்.
இதில், படுகாயமடைந்த அரிகிருஷ்ணனுக்கு தலையில், 3 தையல் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விமலாதேவி, ஆர்த்தி உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து, பிரகா ைஷ கைது செய்தனர்.