சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்

கடலுார்: கடலுாரில் நேற்று விடுமுறை மற்றும் வெயில் தாக்கத்தையொட்டி சில்வர் பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்கள்தான் கோடை நாட்களாகும். தற்போது ஜூன் மாதம் முடிந்து ஜூலை தொடங்கியுள்ளது. ஆனால் இன்னும் வெயில் குறைந்தபாடில்லை. தொடர்ந்து வெயில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நே ற்று 101.8 டிகிரி; நேற்று முன்தினம் 100.8 டிகிரி; கடந்த, 9ம் தேதி 100 டிகிரி; பாரன்ஹீட் முறையே வெப்பம் பதிவானது. நேற்று பகல் முழுவதும் பொதுமக்கள் புழுக்கத்தினால் அவதிப்பட்டனர். இதனால் புழுக்கத்தில் இருந்து இளைப்பாற சில்வர் பீச்சில் குவிந்தனர்.

Advertisement