குட்கா விற்பனை பெண் கைது

கடலுார்: பெட்டிக் கடையில் குட்கா பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் துறைமுகம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோனங்குப்பம் ஆறுமுகம் மனைவி குப்பம்மாள்,65; என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 105 பாக்கெட் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து குப்பம்மாளை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement