'ஜவுளி திறன் மையம்' திருப்பூரில் தொடங்க முதல்வருக்கு கோரிக்கை

திருப்பூர்: செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் தமிழகத்தை முன்னணி மையமாக உயர்த்தும் வகையில், திருப்பூரில் 'புதுமை ஜவுளி மற்றும் சிறப்பு திறன் மையம்' அமைக்க வேண்டும் என, பின்னலாடை தொழில்துறையினர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியஸ்டர், நைலான் போன்ற செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி, வட மாநிலங்களில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த புதிய ஆடை உற்பத்தி புரட்சியை உருவாக்க தொழில்துறையினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விளையாட்டு ஆடைகள், தொழில்நுட்ப ஆடைகள், உடற்பயிற்சி ஆடைகள் உற்பத்தியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்ற திருப்பூர் பின்னலாடை துறையினர் களமிறங்கியுள்ளனர்.

அதற்கேற்ப, தமிழக அரசு திருப்பூரில் 'புதுமை ஜவுளி மற்றும் சிறப்பு திறன் மையம்' அமைத்து, புதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும், தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

@block_B@

'ஜவுளி பாரம்பரிய மையம்'



திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருப்பூரில் சிறப்பு திறன் மையம் அமைப்பதன் வாயிலாக பாலியஸ்டர், நைலான் ஆடைகளின் உற்பத்தி மிகவும் எளிதாகும். இத்துடன், திருப்பூரின் நீண்டகால ஜவுளி பாரம்பரியத்தையும், நீடித்த நிலைத்தன்மை ஆடை உற்பத்தியில் படைத்துள்ள சாதனைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில், 'காந்தி நினைவு மையம் மற்றும் ஜவுளி பாரம்பரிய மையம்' அமைக்கவும் கடிதம் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனர்.block_B

Advertisement