கிள்ளை பட்டாசு வெடி விபத்து: சிகிச்சை பலனின்றி பெண் இறப்பு

கிள்ளை: கோவில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்தார்.

சிதம்பரம் அடுத்த கிள்ளை குச்சிபாளையம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 29ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது. திருவிழாவிற்காக பட்டாசு மற்றும் நாட்டு வெடிகள் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. தீமிதி விழா முடிந்து, இரவு பக்தர்கள் மாவிளக்கு போடும் நிகழ்ச்சி நடந்தது. பெண் ஒருவர் மாவிளக்கில் திரியை ஏற்றிவிட்டு தீயை அணைக்காமல் துாக்கி வீசியபோது, தீக்குச்சி பட்டு பட்டாசு மற்றும் நாட்டு வெடிகள் வெடித்தது.

இந்த விபத்தில் காயமடைந்த கீழமூங்கிலடி கிராமத்தை சேர்ந்த உமா, 45; உட்பட 20 பேர் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உமா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement