சங்கராபுரத்தில் நகர வளர்ச்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரசு கலைக்கல்லுாரி மற்றும் மகளிர் பூங்கா அமைக்கப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
சங்கராபுரத்தில், பொது சேவை அமைப்புகள் சார்பில் நகர மேம்பாடு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ராகேஷ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
வியாபாரிகள் சங்கத் தலைவர் தெய்வமணி, செயலாளர் குசேலன், ரோட்டரி கிளப் தலைவர் துரை, டவுன் அரிமா சங்க தலைவர் ராசேந்திரன் முன்னிலை வகித்தனர். பொது சேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.
நகர வளர்ச்சி தொடர்பாக பல்வேறு அமைப்பினர் எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கினர்.
கூட்டத்தில், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, மோட்டார் வாகன சங்கத் தலைவர் திருவேங்கடம், இன்னர்வீல் கிளப் தலைவி கீதா, வாசவி கிளப் தீபா, நுகர்பொருள் சங்கம் ரவி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல்,திருக்குறள் பேரவை லட்சுமிபதி,ஓட்டல் சங்கம் சுதாகரன், பாண்டலம் கோவில் அரிமா சங்கத் தலைவர் விஜயகுமார்.
முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத் தலைவர் முருகன் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் நகர வளர்ச்சி குறித்து தங்கள் கருத்துகளைக் கூறினர்.
பூட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கராபுரம் கிளை நுலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் பயன்பெற நகரில் பூங்கா அமைக்க வேண்டும்.
சங்கராபுரம் நகரில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நகருக்குள் மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இறுதியாக ராகேஷ் எம்.எல்.ஏ., பேசுகையில், ‘சங்கராபுரத்தில் அரசு கலைக்கல்லுாரி, மற்றும் நகரில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இது போன்ற கூட்டம் நடைபெறும்’ என்றார். இன்னர்வீல் மஞ்சுளா நன்றி கூறினார்.
மேலும்
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி