தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக லயோலா மணி நியமனம்

59


நமது நிருபர்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணியை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. லயோலா மணிக்கு இன்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் இருந்தார். நியமன ஆணையை பெற்றுக்கொண்ட லயோலா மணி கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என உறுதி அளித்தார்.

ஏற்கனவே தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி இருந்தார். தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் தற்போது லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement