30 கிராமங்களுக்கு புதிய பணி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

செஞ்சி: செஞ்சி ஒன்றிய கூட்டத்தில் 30 கிராமங்களில் புதிய பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செஞ்சி ஒன்றிய சாதாரண கூட்டம் சேர்மன் விஜயகுமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.க்கள் மணிமாறன், உதயகுமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மக்கள் கோரிக்கை மற்றும் கலெக்டர் அறிவுறுத்தல் படி செஞ்சி ஒன்றியம், வேலந்தாங்கல், சே.பேட்டை, சத்தியமங்கலம், ஆலம்பூண்டி உட்பட 30 ஊராட்சிகளில் சிமென்ட் சாலை, தானிய களம், ஆழ்துளை கிணறு, சிறு பாலம் உள்ளிட்ட புதிய பணிகளை செய்ய ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், துணைச் சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், அன்னம்மாள், சாவித்திரி, ஆரோக்கியராஜ், செண்பகப்பிரியா, துரை, புவனா, சீனுவாசன், மல்லிகா பனிமலர் உமா மகேஸ்வரி, ஞானம்பாள், பொறியாளர்கள் நாராயணசாமி, தண்டபாணி, ரஞ்சித் கண்ணா, ஏ.பி.டி.ஓ., கலா ஆகியோர் பங்கேற்றனர். ஏ.பி.டி.ஓ., கன்னியப்பன் நன்றி கூறினார்.

Advertisement