போதை கலாசாரத்தை தடுக்க கையெழுத்து இயக்கம்

விழுப்புரம்: தமிழகத்தில் பாலியல் வன்முறை மற்றும் போதை கலாசார ஒழிப்பை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நேற்று துவங்கியது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொருளாளர் காத்தவராயன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் விமல்ராஜ், பிரவீனா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்துரு வரவேற்றார்.

விழுப்புரம் தி.மு.க., நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் தினேஷ், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் மணிகண்டன், துணைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement