கடலாடி ஊராட்சி செயலரை மாற்ற வலியுறுத்தி  கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம்: கடலாடி ஊராட்சி செயலரை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம்  த.வெ.க., சார்பில் மனு அளித்தனர். த.வெ.க. நிர்வாகியும், சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான பாஸ்கரன் தலைமையில் மக்கள் மனு அளித்தனர். பாஸ்கரன்  கூறியதாவது: 

கடலாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செங்கல் கழிவுகளை கொட்டி தரமற்ற முறையில் கிராவல் சாலை அமைத்து முறைகேடு நடந்துள்ளது. இதில் அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளது. சாலை அமைத்த கடலாடி ஊராட்சி செயலர் சுபாஷ் சந்திரபோஸ் இடம் விசாரிக்க வேண்டும். சொந்த ஊரில் தொடர்ந்து பணிபுரியும் ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்ய வேண்டும். 

கடலாடி வேளாண்மை விரிவாகம் மையம் பழைய கட்டடக் கழிவுகளை வியாபார நோக்கில் விற்பனை செய்தும், அங்கிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய இரும்பு பொருட்களும் மாயமாகி உள்ளது. எனவே  ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை  ஆய்வு செய்து மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்புகார் தொடர்பாக  கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீ நிகம் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக  கலெக்டர் தெரிவித்தார் என்றார்.––––––

Advertisement